கோபுர தீபம் GOPURA DEEPAM

கோபுர தீபம் GOPURA DEEPAM

300.00

SKU: GO 1669 Category: Tag: Product ID: 3773

Description

கோபுர தீபம் (நாவல்)

நா.பாவின் நாவல்களுள் கோபுர தீபம் முதன்முதலாகப் பதிப்பிக்கபட்ட நாவல் என்ற பெருமையும், எந்த ஒரு இதழிலும் தொடராக வெளிவராமல் நேரடியாக புத்தக வடிவம் பெற்ற நாவல் என்ற சிறப்பும் உடையதாகும். இதன் முதற் பதிப்பு  1959 ஆம் ஆண்டிலும். இரண்டாவது பதிப்பு  1970 ஆம் ஆண்டிலும் வெளிவந்தன. ஏறக்குறைய  47 ஆண்டுகளுக்குப் பிறகு இப்பொழுது மீண்டும் வாசக அன்பர்களுக்கு ஒரு விருந்தாகப் பதிப்பிக்கப்பட்டுள்ளது.

சுதந்திரப் போராட்ட காலத்தைப் பின்னணியாகக்  கொண்டு நாவலைப் படைத்துள்ளார். விடுதலைப் போராட்டத்தில் முழுவீச்சுடன் ஈடுபட்டதில் தமிழகத்தின் ஊர்களுள் திருநெல்வேலி மாவட்டம் தனி இடம் பெற்றதாகும். அந்த சிறப்புமிக்க ஊரையே கதை நிகழும் இடமாகக் கொண்டு அதன் சுற்றுவட்டாரப் பகுதிகளில் கதை நிகழ்வதாக அமைத்துள்ளதால் அந்தப் பகுதிகளைப் பற்றிய அறிமுகம் வாசகர்களுக்கு கிடைக்கின்றது.

Additional information

Weight .430 kg