Description
அறுவடைக்கு அணியமான நிலம் “நாளைக்கு இந்த வயலில் அறுவடை செய்யப் போகிறோம்! இதுவரை குடியிருந்த உயிரினங்களே… வேறு இடம் பாருங்கள்!” கிணைப்பறையின்”டொம் டொம் அதிர்வில் நரிகளும் புணுகுப் பூனைகளும் குட்டிகளை வாயில் கவ்விக் கொண்டு புலம் பெயருமே… அத்தகைய வலி.
அரி காய்ச்சல் முடிந்து, கதிர்களைக் களத்திற்குத் தூக்கிச் சென்றபின் தப்புக்கதீர் பொறுக்க வரும் குருவிகளின் சிறகசைவில் தெரியுமே குதூகலம்… அத்தகைய களிப்பு.
இவ்விருவேறு உணர்வுகளையும் நெஞ்சுக்குள் இட்டு நிரப்புகிறது தூவானம்.
Reviews
There are no reviews yet.