Description

சோழ மோகினி (வரலாற்று நாவல்)

வரலாற்றில் இரண்டாம் ராஜேந்திரனுக்குப் பிறகும் வீர ராஜேந்திரனுக்கு முன்பும் பிறந்த ராஜமகேந்திறனைப் பற்றி வரலாற்றில் இரட்டிப்பு செய்யப்பட்டிருப்பதாகவே தோன்றுகிறது.

இரட்டிப்பு செய்யப்பட்ட கங்கை கொண்ட சோழரின் மகன் இராஜமகேந்திரனை வெளிச்சத்திற்குக் கொண்டு வர விரும்பி வரலாறுகளை புரட்டிய போது கடுகளவு  தகவல்களே இருந்தன. அதுவும் முரண்பட்டு இருந்தன.  தகவல்களும் ஆதாரங்களும் மிகக் குறைவாக இருக்கும் இடங்களில் கற்பனைகளை இட்டு நிரப்புவதுதான் சரித்திர நாவலாசிரியரின் பணி.

இக்கதை நடந்து முப்பது ஆண்டுகளுக்குப் பின்பாகவே சோழநாட்டில் பல மாறுதல்களும் அதிரடிகளும் நடந்தன. அவற்றுக்கு முன்னோட்டமாகச் சில சம்பவங்களை இந்த நாவலில் சேர்த்திருக்கிறேன். அவை நடந்திருக்க வாய்ப்புண்டு. எது எப்படியிருப்பினும் ராஜமகேந்திரன் என்னும் சோழ அரசக் குமாரனை  உங்களுக்கு அறிமுகப்படுத்தியிருப்பதில் எனக்கு மகிழ்ச்சி.

Additional information

book-author

PUBLICATION

SEETHAI PATHIPPAGAM