Description
வேடி வைத்தியர் நெஞ்சு வலிப்பதாகச் சொன்னதால் மகன் அவரை மருத்துவமனைக்கு அழைத்துச் சென்றான். டாக்டர் அவரது டெஸ்டு ப்போட்டை பார்த்து விட்டு ‘நார்மல்’ என்றார். வெளியே வந்த வேறு வைத்தியர் எனக்கு தெரியாததா இந்த டாக்டருக்குத் தெரியப்போகுது! இனி அதிக நாளு நான் இருக்கமாட்டேன் என்றார். அவர் சொன்னது போலவே ஒரு சில நாட்களில் மாரடைப்பால் அவர் இறந்து விட்டார்.
இப்போது வோ வைத்தியர், மனைவி, கந்து மகன்கள், மூன்று மகள்கள். அவரது இரு அண்ணன்கள், அண்ணன்களின் குடும்பம் என பத்துக்கும் மேற்பட்டவர்கள் கூட்டுக் குடும்பமாக வாழ்ந்து வந்த வீடு, இடிந்து விழும் நிலையில் குடியிருக்க யாரும் இல்லாமல் அனாதையாகக் கிடக்கிறது.
அதோடு அவர் உயிருக்கும் மேலாக நேசித்த ஓலைச் சுவடிகள், மருந்து தயாரிக்க பயன் படுத்திய உபகரணங்கள், மருந்து பாட்டில்கள் போன்றவை. ஒரு காலத்தில் நட்டாலத்தில் பெயர் பெற்று விளங்கிய வேழ வைத்தியர் கடையில் அனாதையாகக் கிடக்கிறது. – வேடிவைத்தியர் வீடும், கடையும், அதில் இருக்கின்ற பொருட்களும் மட்டுமே அங்கே அனாதையாகக் கிடக்கின்றன! இல்லை . அவர் உயிருக்கும் மேலாக நேசித்த தமிழர்களின் பாரம்பரிய மருத்துவமான சித்த மருத்துவமும், அதைக்காப்பாற்ற அவர் எடுத்துக் கொண்ட முயற்சிகளும்தான்
Reviews
There are no reviews yet.