Description
குருதித்தேசம் (வரலாற்று நாவல்)
உலகத்தில் எங்காவது ஒரு மூலையில் ஒரு நாடு இன்னொரு நாட்டுடன் போர் செய்து கொண்டே இருக்கிறது. குருதி வெள்ளம் எவ்வளவுதான் மண்ணை நனைத்தாலும் போரின் வெறி மனிதர்களுக்கு குறையவில்லை. ஆனால் ஒரு நாட்டிற்குள்ளேயே இனப்பகையால் பல போர்கள் ஏற்பட்டு குருதி பாய்ந்த வரலாறாக இலங்கையில் பல நிகழ்வுகள் நடந்துள்ளன.
இலங்கையில் ஆட்சி பீட யுத்தங்கள் பல நடந்துள்ளன. விஜயன் சிங்கள ஆட்சியை நிறுவ அவன் நடத்திய போர்கள் தமிழர்களுக்கு எதிராக நடந்தவை. மானவர்மன் சிங்கள ஆட்சியைக் கைப்பற்றியவுடன் தமிழர்கள் ஆட்சி இலங்கையில் நடைபெறவில்லை என்பதை மகாவம்சம் சொல்கிறது.
சிங்கள மன்னர்கள் பலர் தங்களது ஆட்சியை தக்கவைத்துக் கொள்ள சிங்கள பீடம் தனக்குத்தானே குருதி அபிசேகம் செய்து கொண்டது. அதில் ஒரு சிறு பகுதி மட்டுமே இங்கே குருதி தேசமாக உருவாகி இருக்கிறது.