Description
தமிழ்ச் சங்க இலக்கியங்களுள் முதன்மையானதாகக் கருதத்தக்க அகநானூறும் புறநானூறும் பழந்தமிழ் மக்களின் வாழ்வியல் பெருவழிகள் என்பதை நாம் அறியத் தவறிவிட்டோம். புறநானூறு பழந்தமிழரின் வரலாறாகவும் அகநானூறு பழந்தமிழரின் வாழ்வியல் ஒழுக்கலாறாகவும் இருந்துள்ளது. புறநானூற்றைப் பழந்தமிழரின் புறப்பண்பாடு என்றும் அகநானூற்றைப் பழந்தமிழரின் அகப்பண்பாடு என்றும் சுட்டலாம்.
பழந்தமிழரின் விழாக்கள், திருமணம், வழிபாடுகள், மூவேந்தர்கள், அரசர்கள், குறுநில மன்னர்கள், போர்முறைகள், விருந்தோம்பல் பண்பாடு, புராணக்கதைகள், குற்றச்செயல்பாடுகள், தண்டனைமுறைகள், விலங்குகள், பறவைகள், மலர்கள், மரங்கள், நம்பிக்கைகள், உறவுமுறைகள், அறப்பண்பு, பலத்திறப்பட்ட தொழிலாளர்கள் என அனைத்தையும் எளிய வாசிப்புக்கு உரிய வகையில் ஆற்றொழுக்கான நடையில் இந்தப் புத்தகத்தில் இடம்பெற்றுள்ளன.
Reviews
There are no reviews yet.