Description

காஞ்சீவரம் நடராசன் அண்ணாதுரை (C. N. Annadurai, 15 செப்டம்பர், 1909 – 03 பெப்ரவரி, 1969) ஓர் இந்திய அரசியல்வாதியும், மதராஸ் மாநிலத்தின் கடைசி முதல்வரும், தமிழகத்தின் முதலாவது முதலமைச்சருமாவார். இவர் அறிஞர் அண்ணா எனவும் பேரறிஞர் அண்ணா எனவும் அழைக்கப்படுகிறார். இவர் இந்தியா குடியரசான பிறகு, ஆட்சி அமைத்த காங்கிரசல்லாத முதலாவது திராவிடக்கட்சித் தலைவரும், அறுதிப் பெரும்பான்மையுடன் ஆட்சி அமைத்தவரும் ஆவார்.

தனது கருத்துகளை கவிதை, நாடகம், கதை, கடிதம், சொற்பொழிவு,கட்டுரை, உரையாடல், வானொலி உரை, திரைப்படம் எனப் பல்வேறு வடிவங்களில் தொடர்ந்து வெளியிட்டுவந்தார். அவற்றுள் பற்பல எழுத்துவடிவம் பெற்றன; அவற்றுள் பல நூல் வடிவம் பெற்றன. மேலும் பல நூல் வடிவம் பெறாமல் இருக்கின்றன. அவர் குடியரசு, விடுதலை, திராவிடநாடு, மாலைமணி, நம்நாடு, காஞ்சி, Home Land என தான் நேரடியாகப் பொறுப்புவகித்த இதழ்களில் மட்டுமன்றி மன்றம், முரசொலி, தென்றல் என திராவிட இயக்கத்தின் பிற தலைவர்கள் வெளியிட்ட இதழ்களிலும் தனது படைப்புகளை வெளியிட்டிருகிறார்.

Additional information

Weight 0.072 kg