அழியா முகம்

அழியா முகம்

200.00

SKU: MJPH10144 Category: Product ID: 2982

Description

“இந்த நாவலில் தூக்குத் தண்டனைக் கைதியின் கடைசி ஆசையை மையமாகக் கொண்டு ஒரு திரைப்படத்தையே உருவாக்கி உள்ளார் எழுத்தாளர் டாக்டர் ப.சரவணன். ‘ஒரு நடிகை, ஒரு கைதி, ஒரு திரைப்படம்’ ஆகிய மூன்றை மட்டுமே வைத்துக்கொண்டு ‘அடுத்து என்ன நிகழும்?’ என்று ஆர்வத்துடன் ஒவ்வொரு அத்யாயத்தையும் படிக்குமாறு நம்மைத் தூண்டியுள்ளார் நாவலாசிரியர். வாழ்வில் சில தருணங்கள் நம்மைப் புரட்டிப் போட்டுவிடும். எப்போது நாம் புரண்டு விழுந்தாலும் அதிலிருந்து மீண்டெழுதலே வாழ்க்கை. மீண்டும் நாம் அதே இடத்தில் நிற்கவேண்டும் என்பதில்லை. சற்று விலகியும் நிற்கலாம்தான். எந்த இடத்தில் நின்றாலும் நாம் நாமாக நிற்க வேண்டும். அதுதான் முக்கியம்.
இந்த நாவலில் ஒரு நடிகையின் ஒப்பனையற்ற வாழ்க்கையைக் காட்டியுள்ளார் நாவலாசிரியர். இதில் சில மனிதர்களின் உளவியல் விரிவாகப் பேசப்பட்டுள்ளது. சில தருணங்களில் சிலர் அப்படித்தான் நடந்துகொள்வார்கள். அதற்கு அவர்களாகக் கற்பித்துக்கொள்ளும் எண்ணற்ற காரணங்கள் அனைத்தும் அவர்களுக்கு மட்டுமே ஏற்புடையதாக இருக்கும். நாம் அவற்றைப் பெரிதுபடுத்த வேண்டியதில்லை.”