ஆன்மாவும் உடலும்

ஆன்மாவும் உடலும்

150.00

SKU: MJPH10142 Category: Product ID: 2980

Description

மனித உடல் குறித்து மருத்துவ நூல்கள் விரிவாக எடுத்துரைத்துள்ளன. மனித ஆன்மா குறித்து எந்த மருத்துவ நூலும் விளக்கவில்லை. ஆன்மா என்பது மருத்துவ அறிவியலுக்கு எட்டாத உயரத்தில் இருப்பதாலோ அல்லது ‘எதையுமே நிரூபித்துக் காட்டுவதே அறிவியலுக்கு அடிப்படை’ என்பதால், ‘ஆன்மாவை நிரூபிக்க இயலவில்லை’ என்பதாலோ எந்த மருத்துவ நூலும் ஆன்மாவைப் பற்றி விளக்கவில்லை.
ஆனால், காலந்தோறும் இந்திய மகாமுனிவர்கள் ஒவ்வொரு நொடியும் தங்களின் ‘ஆன்மா’ பற்றியே சிந்தித்திருக்கிறார்கள். பிறரின் குறித்தும் அவற்றுக்கும் தங்களின் ஆன்மாவுக்கும் இடையே உள்ள உறவுநிலை பற்றியும் அவர்கள் அறிந்திருந்தனர். அவர்கள் அதைப் பற்றி விரிவாகவும் விளக்கமாகவும் பேசியிருக்கிறார்கள். செய்யுள் வடிவில் எழுதியும் இருக்கிறார்கள்.
இந்திய ஆன்மாவியல், இந்திய உடலியல் என்பன அவர்களின் வாய்ச்சொற்களின் வழியாகவே காலந்தோறும் தலைமுறை தலைமுறையாகக் கையளிக்கப்பட்டு இன்று இந்திய ஆன்மிகமாகத் துறையாக வளர்ந்துள்ளது. அந்த ஆன்மிக ஆலமரத்தின் அடியில் அமர்ந்த தன்னை உணர்ந்து, தன் உடலைப் பற்றியும் தன் ஆன்மாவைப் பற்றியும் சிந்தித்து திரு.அன்பில் ஜார்ஜ் அவர்கள் இந்தப் புத்தகத்தை உருவாக்கியுள்ளார்.