உந்துசக்தி நாயகன்

உந்துசக்தி நாயகன்

200.00

SKU: MJPH10209 Category: Product ID: 3237

Description

அப்துல்கலாம் பேசிய சொற்பொழிவுகள் அனைத்தையும் சேர்த்து வைப்பது எனது பொழுது போக்கு மட்டுமல்ல, அவைகள் பயனுள்ள போது படித்து பார்ப்பதுமே எனது வழக்கமாக இருந்தது. இந்த மகிழ்ச்சியை அனைவரும் பெற வேண்டும் என்ற ஆர்வத்தில் இந்த புத்தகம் அமைக்க முற்பட்டேன். இவ்வுலகில் மனிதனாகப் பிறந்து மகானாக வாழ்ந்த மாமனிதர்களில் ஒரு சிலர் மட்டுமே நினைவில் இருக்கிறார்கள். அவர்களில் அப்துல் கலாம் மிகவும் முக்கியமானவர். 83 ஆண்டுகளுக்கு முன் காரணம் இல்லாமல் ஒரு குழந்தை அழுதது. இன்று காரணம் கருதி உலகமே அழுது கொண்டிருக்கிறது. ஹோவர் கிராப்ட் முதல் அதி நவீன ஏவுகளை வரை தயாரித்த இணையற்ற சாதனையாளர் அப்துல் கலாம் அவர்கள்.
ஆற்றல் மிகுந்த கருத்துகள், செய்திறன் ஊக்கம் பெறும் கட்டுரைகள், தனக்குத்தானே ஊக்கம் பெறும் ஆர்வலர்கள், அனைத்தையும் பொதிந்து உள்ளடக்குகின்ற கேள்விகள், என்ற அவரது சொற்பொழிவுகள் அனைத்தையும்
தனித்தனி தலைப்பில் இங்கே தந்திருக்கிறேன். எந்த ஒரு தலைப்பையும் தேர்வு செய்து. செய்தியை படிக்கும் போதும், ஒவ்வொன்றும் இனிமையாகவும், உண்மைப் பொருளை உணர்த்துவதாகவும், ஆக்கமும் ஊக்கமும் தருவதாகவே அமையும். படியுங்கள்! பயனை பெறுங்கள்!