Description
எதை வென்ற ஆயுதம் இது? எதை வெல்லும் ஆயுதம் இது? அப்படி என்ன சக்தி இருக்கிறது இந்த பேராயுதத்தில்? இந்த உலகில் ஒவ்வொன்றும் தன்னை தற்காத்துக் கொள்ள பலமிதமான ஆயுதங்களை பயன்படுத்துகிறது. சிவனுக்கு திரிசூலாயுதம், திருமாலுக்கு சக்கராயுதம், கண்ணுக்கு இமை ஆயுதம், வேடனுக்கு வில் ஆயுதம், வீரனுக்கு வாள் ஆயுதம், துணிவுள்ள மனிதனுக்கு தன்னம்பிக்கை ஆயுதம், சாதனையாளனுக்கு திறமை ஆயுதம்.
அது போல ஒரு மாபெரும் போர்க்களத்திற்கு உதவக்கூடிய போராயுதமாக அமைந்துள்ளது இந்த பேராயுதம்! சேர. சோழ, பாண்டியர் என்னும் மூவேந்தர்களின் மாபெரும் வெற்றிகளில், அவர்களுடன் துணை நின்ற சிற்றரசர்களுக்கும் குறுநில மன்னர்களுக்கும் பெரும் பங்கு உள்ளது. அவர்களின் வீர தீர செயல்பாடுகளை மனதில் கொண்டு நான் உருவாக்கிய இராச மறப் பேரரையர் என்னும் சிற்றரசர் குலத்தில் தோன்றிய பூவான நாதன் என்னும் வீர வாலிபன், பாண்டிய நாட்டிற்கு ஏற்பட்ட பேராபத்தை, பேராயுதம் கொண்டு எப்படி காப்பாற்றினான் என்று சமூக சிந்தனைகளுடன் விளக்குகிறது எதையும் வெல்லும் பேராயுதம் என்னும் இந்நூல்.
Reviews
There are no reviews yet.