Description
மதுரை, டாக்டர் புலவர் வைசங்கரலிங்கனார் அவர்கள் தமிழகம் அறிந்த பண்பாளர். ஆசிரியப் பணியில் இருந்து ஆயிரக்கணக்கான மாணவர்களுக்கு வழிகாட்டியவர். மாணவர்களின் ஒளிவிளக்காக திகழ்ந்தவர். இவருடைய உரை கேட்டு உற்சாகம் பெறுபவர்கள் பலர், தன்னைப்போலவே அடுத்தவர்களையும் உற்சாகப்படுத்தி உயர வைக்கவேண்டும் என்ற உயர்ந்த உள்ளம் கொண்டவர்.
நூறாண்டு வாழ்ந்து சாதிக்க வேண்டியதனை மிகக் குறுகிய காலமே வாழ்ந்து சாதித்துவிட்டுச் சென்ற சான்றோர்கள் மிகச் சிலரே! அவர்களுள் ஒருவர் ‘கணித மேதை’ இராமானுஜம் அவர்கள். “இந்தியாவின் மகன்’ என்று ஒவ்வொரு இந்தியக்குடிமகனாலும் பெருமையோடு அழைக்கத் தகுந்தவர் ‘கணித மேதை’ இராமானுஜம் அவர்கள், மிகக் குறுகிய காலத்தில் மட்டுமே வாழ்ந்து மடிந்த அவரைப் பற்றி மிகச் சுருக்கமாக ஆனால், ஆரமானத் தகவல் களையும் அளிக்கும் வகையில் இந்த நூலினை உருவாக்கியுள்ளார். கணிதத்தில் கரைகண்டவர் இராமானலும். அவரின் வாழ்க்கைக் கணக்கை நமக்குச் சுருக்கித் தருகிறது இந்தப் புத்தகம். அவரைப் பற்றி அறிந்துகொள்ள இது நல்லதொரு கையேடு. இந்தக் கைபேட்டின் உதவியோடு இந்தத் தலைமுறையும் இனிவரும் தலைமுறைகளும் ‘கணித மேதை’ இராமானும் அவர்களைப் பற்றி நன்றாக அறிந்துகொள்ள பெருவாய்ப்பு ஏற்பட்டுள்ளது.
Reviews
There are no reviews yet.