Description
என்னுடைய முதல் புதினமான ‘கனல் காரிகை ‘ ஒல்லையூர்தந்த பூதப்பாண்டியன், அவர் மனைவி பெருங்கோப்பெண்டு மற்றும் ஒல்லையூர் தலைவன் பெருஞ்சாத்தன் ஆகியோரை மையப்படுத்தி எழுதப்பட்டுள்ளது. சங்க இலக்கியத்தை மையமாகக் கொண்டு அதன் உண்மைத் தன்மை மாறாமல் கற்பனை கலந்து எழுதிய இப்புதினம். சங்க கால மக்களின் நற்குணங்களை விவரிப்பதோடு மட்டுமல்லாமல், அவர்கள் பின்பற்றிய பழக்க வழக்கங்களையும், நம்பிக்கைகளையும், கைம்பெண்களின் வாழ்க்கை முறையையும் தெளிவாக எடுத்தியம்புகிறது.