கலைஞரின் சாதனைகள் நலத்திட்டங்கள்

கலைஞரின் சாதனைகள் நலத்திட்டங்கள்

150.00

SKU: MJPH10137 Category: Product ID: 2976

Description

பழைய ‘திருவிளையாடல்’ திரைப்படத்தில் ஒரு வசனம் வரும் தருமிக்கும், இறைவனுக்கும் இடையிலான ஓர் உரையாடலில் தருமி வினாக்களைக் கேட்பார். அந்த வினாக்களுக்கு இறைவன் விடைகளை அளிப்பார். தருமி கேட்கும் வினாக்களுள் ஒன்று ‘பிரிக்க முடியாதது எது?’ என்பது. இதற்கு நான் கூற விழையும் விடை ‘கலைஞரும் கவிதையும்’ என்பதே. மற்றொரு வினா ‘சேர்ந்தே இருப்பது?’ என்பது இதற்கு நான் கூற விழையும் விடை ‘கலைஞரும் தமிழகமும்’ என்பதே. |
அத்தகைய கலைகருக்குத் தன் கவிதையால் மாலை செய்திருக்கிறார் கவிஞர், பண்ருட்டி சுக. மணிகண்டன் அவர்கள். அந்த மாலையில் உள்ள ஒவ்வொரு பூவும், கலைஞர் அவர்களின் அளப்பரிய சாதனையே. மக்களுக்காக அவர் செய்த ஒவ்வொரு பொதுத்தொண்டையும் காலத்தில் இருத்தும் காவியமாக இந்தக் கவி மாலையைப் புனைந்து, கலைஞரின் எழுதுகோலுக்குச் சூட்டியிருக்கிறார் இந்தக் கவிஞர், ஆட்சியாளர்கள் நாட்டு மக்களுக்குச் செய்யும் பொதுத்தொண்டுகள் பெரும்பாலும் கால, ஓட்டத்தில் கலைந்து போவதுண்டு. கலைஞர் அவர்கள் தன் ஆட்சிக் காலத்தில் செய்த ஒவ்வொரு பொதுத் தொண்டும் காலத்தால் இன்றும் அழியாமல் நிலத்திலும் மக்கள், மனத்திலும் வாழ்கின்றன. –
– ஒரு மனிதன் அவன் வாழும் காலத்தில் போற்றப்படுவதைவிட அவன் மறைந்த பின்னர் அவன் புகழ் அழியாமல் இருப்பதுதான் ‘அவன் தனக்காக அல்ல; தன், மக்களுக்காக வாழ்ந்தான்’ என்பதற்கான அடையாளம். அந்த அடையாளம் என்றும் கலைஞருக்கு உண்டு,
கலைஞரின் சாதனைகளையும் நலத்திட்டங்களையும் 38 கவிதைகளில் புனைந்திருக்கும் இந்தக் கவிஞருக்கும் அது போன்றதொரு அடையாளம் கிடைக்கும். என்ற நம்பிக்கை எங்களுக்கு இருக்கிறது.