Description
களப்பலி (வரலாற்று சிறுகதைகள்)
நம் நாட்டு வரலாற்றையும், தமிழர் வீரத்தையும் பெருமையையும் விளக்கக் கூடிய வகையிலான பதினொரு சிறுகதைகளின் தொகுப்பே ‘களப்பலி’ குலோத்துங்க சோழனின் வெற்றிக்காகத் தன் ஒரே மகனைத் தன் கையால் பலியிடுவதைக் காட்டுகிறது முதல் கதையான களப்பலி. வேலுநாச்சியார், கிட்டூர்ராணி சென்னம்மா ஆகியோரின் வீரமிக்க வரலாற்றையும், சங்க கால அதியன் – தொண்டைமான்: ஆய் – நற்கிள்ளி இவர்களின் போர் நிறுத்த வரலாற்றையும், ஒளரங்கசீப் மதமாற்றம் செய்ய முனைந்த வரலாற்றையும், இராசராசன் குந்தவையை மணமுடித்துத்த வரலாற்றையும், சொர்ணமுகி – சூர்யவர்மன் பெயர்கள் நிலைபெற்ற வரலாற்றையும், போடி ஜமீன் உருவான சுவைமிகுந்த வரலாற்றையும் இந்நூலின் சிறுகதைகள் அழகிய எளிய நடையில் எடுத்துரைக்கின்றன.