Description

ஒன்றையொன்று விஞ்சிநிற்கும் வானவில்லின் ஏழு நிறங்களில் எந்த நிறத்தை நாம் சிறந்த நிறம் என்று கூறவியலும்? ஏழும் இயற்கையின் அதியுன்னத நிறங்களே!. அவைபோலத்தான் இந்தச் சிறுகதைத் தொகுப்பில் உள்ள பத்துச் சிறுகதைகளும்,
பத்துவிதமான கதைகள். பத்தும் முத்தான கதைகள். இவற்றின் ஒவ்வொன்றிலும் இறுதியில் உள்ள ‘திருப்பம்’ எழுத்தாளர் கண்ணன் சுப்பிரமணியன் அவர்களால் மிகச் சிறப்பாகக் கையாளப்பட்டுள்ளது. அந்தத் திருப்பம் வாசகரைப் புரட்டிப் போட்டுவிடுகிறது.
ஒவ்வொரு சிறுகதையும் ஒவ்வொரு விதமான, குறிப்பாக வாசகர்கள் யூகிக்க இயலாத கதைக்கருவையும் கதைப் பின்னணியையும் கொண்டு விளங்குகின்றன. இவற்றில் உள்ள ஒவ்வொரு கதையும் குறுநாவலாகக் கூட விரித்து எழுதத் தக்க அளவி ல்தான் உள்ளது. காரணம், அதன் கதைக்கருவின் அடர்த்தி அப்படி பெரும்பாலான கதைகள் உளவியல் அடிப்படையில் எழுதப்பட்டுள்ளன.
ஒட்டுமொத்தத்தில், இந்தச் சிறுகதைத்தொகுப்பு தமிழ் வாசகர்களுக்கு நல்லதொரு வாசிப்பனுபவத்தை நல்கும் என்பதில் ஐயமில்லை. புதிய களங்களுக்கு நம் மனத்தை அழைத்துச் சென்று, புதிய செய்திகளை நமக்கு வழங்கும் இந்தக் கதைகளை எழுதியுள்ள எழுத்தாளர் உயர்திரு.கண்ணன் சுப்பிரமணியன் அவர்களுக்குப் பதிப்பகத்தின் சார்பில் பாராட்டுகளைத் தெரிவித்துக் கொள்கிறோம்.

Reviews

There are no reviews yet.

Only logged in customers who have purchased this product may leave a review.