குழியானை

குழியானை

400.00

SKU: MJPH10146 Category: Product ID: 2984

Description

மண்ணாசை இல்லாத மனிதர்களே இல்லை. இந்த உலகம் முழுவதும் உங்களுக்கே சொந்தம் என்று எழுதிக்கொடுத்தாலும் அதைப் பெற்றுக்கொண்டவர், நிமிர்ந்து நிலாவைப் பார்ப்பார். அதையும் கைப்பற்றித் தனதாக்கிக் கொள்ள விரும்புவார். மண்ணைக் கைப்பற்ற விரும்பும் மனிதர்கள் ஒருபோதும் தன் பதவியை இழக்க விரும்பவே மாட்டார்கள். ஒருவேளை பதவியை இழந்துவிட்டாலும் அவர் தன் உயிர் பிரிவதற்குள் மீண்டும் பதவியைப் பெற்றுவிடத் துடிப்பார்கள். அதற்காகப் பலர் தன் உடல் வலிமையைக் காட்டுவார்கள். சிலர் படைவலிமையைக் காட்டுவார்கள். வெகுசிலரே தன் அறிவின் வலிமையைக் காட்டுவார்கள். உடல் வலிமையும் படைவலிமையும் அழியக்கூடியவையே. ஆனால், அறிவின் வலிமையுடையவர்கள் ஒருபோதும் தோற்கவே மாட்டார்கள். அவர்கள் ஒருவகையில் இந்தக் ‘குழியானை’யைப் போலத்தான்.