Description

(கி. மு. 384 – கி. மு. 322) ஒரு கிரேக்க மெய்யியலாளரும் பல் துறைப் புலமையாளரும் ஆவார். அவரது எழுத்துகளில் இயற்பியல், கவிதை, நாடகம், இசை, அளவையியல்(தருக்கம்), சொல்லாட்சி, மொழியியல், அரசியல், ஒழுக்கவியல், உயிரியல், விலங்கியல் ஆகிய பலதுறை அறிவு பொதிந்திருக்கும். பிளேட்டோவும், இவரும் மேற்கத்திய சிந்தனையில் மிகக் கூடிய செல்வாக்குச் செலுத்தும் இருவராகக் கருதப்படுகிறார்கள்.அரிசுட்டாட்டில் மேற்கத்திய மெய்யியலின் மிக முதன்மையான நிறுவுனர் ஆவார். அரிசுட்டாட்டிலின் படைப்புகள் மேற்கத்திய மெய்யியல், அறவியல், அழகியல், அளவையியல், அறிவியல், அரசியல் ஆகியவற்றின் ஒரு முதல் விரிவான அமைப்பை உருவாக்கின. அரிசுட்டாட்டிலின் இயற்பியல் கருத்துகள், ஆழ்ந்த அறிவைத் தரும் இடைக்கால வடிவ இயற்பியல் கோட்பாடுகளாக அமைந்தன. நியூட்டனின் இயற்பியல் கோட்பாடுகள் அரிசுட்டாட்டில் கோட்பாட்டின் ஒரு நீட்சியே ஆகும். அரிசுட்டாட்டிலின் நோக்கீடுகள்(அவதானிப்புகள்) விலங்கியல் அறிவியலைப் பொருத்தவரை துல்லியமாக இருப்பதை, 19 ஆம் நூற்றாண்டில் அறிவியலாளர்கள் உறுதி செய்துள்ளனர். அரிசுட்டாட்டிலின் கோட்பாடுகள் நவீன முறைப்படி பத்தொன்பதாம் நூற்றாண்டில் இணைக்கப்பட்டன.

 

Reviews

There are no reviews yet.

Only logged in customers who have purchased this product may leave a review.