சிந்தனை ஒன்றுடையாள்

சிந்தனை ஒன்றுடையாள்

100.00

SKU: MJPH10032 Category: Product ID: 2640

Description

தூத்துக்குடி மாவட்டத்தின் ஒரு மேல்நிலைப் பள்ளியில் தமிழாசிரியராக நீண்ட காலம் பணியாற்றி தமிழ் ஆசிரியர் என்ற முறையில் தனக்குரிய சிறப்பான பண்பாட்டுக் கடமையை உணர்ந்து செயல்பட்டு, சமூக எழுச்சியில் தீவிர அக்கறை கொண்டு தமிழ்ப்பாடத்தோடு பண்பாட்டையும் ஊட்டியவர் தோழர் இ.முருகன்.
சமூக அக்கறை மிக்க இவர் ஆசிரியர், அரசூழியர், போராட்டங்களில் துணிந்து முன் நிற்பவர். ஜேக்டோ ஜியோ போராட்டக் காலங்களில் இவரின் தலைமைப் பண்பு பிரமாதமாக வெளிப்பட்டது. சமூக வளர்ச்சியிலும் அக்கறை மிக்கவர். சமூகப் போராட்டங்கள் பலவற்றிலும் கவனம் செலுத்தி வருபவர். தனக்குத் தோன்றிய கருத்துக்களைச் சிறுசிறு கட்டுரை களாக்கி, ஜனநாயக மற்றும் மனிதநேய முற்போக்கு இதழ்களில் வெளியிட்டு, மக்களுக்கு சமூக விழிப்புணர்வு ஏற்படுத்தி வருபவர்.
இப்படிச் சமூக விழிப்புணர்வு ஏற்படுத்தும் நோக்கத்துடன் அவர் எழுதிய 16 கட்டுரைகளின் தொகுப்பே “சிந்தனை ஒன்றுடையாள்”.

– பொன்னீலன்.