Description

’’’செம்பியன் மாதேவி’’’ (கி.பி 910 – 1001) சிவஞான கண்டராதித்தரின் பட்டத்தரசி ஆவார். இவரது சமாதி இன்று சேவூரில் (செம்பியன் கிழானடி நல்லூர்) அமைந்துள்ளது

சோழர்கால செப்புத் திருமேனிகள்என்றாலே நினைவுக்கு வருபவர் பெரியபிராட்டி செம்பியன் மாதேவியார் என்று தமிழாய்வு.ஆர்க் போற்றுகிறது.

  • முதலாம் பராந்தகச் சோழன்
  • கண்டராதித்த சோழன்
  • அரிஞ்சய சோழன்
  • சுந்தர சோழன்(இரண்டாம் பராந்தகச் சோழன்)
  • உத்தம சோழன
  • ராசராச சோழன்

முதலிய ஆறு சோழப்பேரரசர்களின் அரசியல் வழிகாட்டியாக இருந்தவர் பெரிய பிராட்டி செம்பியன் மாதேவியார். கண்டராத்த சோழர் கி.பி 957ல் மரணமடைந்த போது அரிஞ்சய சோழனை அரசாள வைத்தவர். ஆதித்த கரிகாலன், ராஜராஜன், குந்தவைஆகியோரை அன்போடு வளர்த்தவர். மேலும் கணவர் இறந்த பிறகு சிவ வழிபாடு, ஆலயத்திருப்பணிகள், தர்ம காரியங்கள் என் வாழ் நாளை கழித்த செம்பியன் மாதேவியார் சுமார் 90 ஆண்டுகள் (கி.பி 910 – 1001) வாழ்ந்து ஆறு சோழமாமன்னர்களின் ஆட்சியைக் கண்டவர்.

செம்பியன் மாதேவியார் தம் காலத்தில் ஏராளமான சிவன் கோயில்களைக் கட்டி திருப்பணிகள் செய்துள்ளார்கள். அவை கி.பி 7 ஆம் நூற்றாண்டிலும், கி.பி 8 ஆம் நூற்றாண்டிலும் சோழப்பேரரசுகளினால் மண்ணாலும், செங்கற்களாலும் கட்டப்பட்ட சிவ ஆலையங்கள். அவர் முதன் முதலில் சீரமைத்த திருக்கோவில் திருநல்லம் ஆகும். [3] சோழ மண்டலத்தில் செங்கற் கோயிலாக இருந்த பத்து ஆலயங்களைக் கருங்கல் கட்டமைப்பாக (கற்றளி) மாற்றிக் கட்டினார்.

இன்றளவும் சோழர்கள் காலக் கோயில்கள் நிலைத்திருக்க செம்பியன் மாதேவியாரின் கற்றளி மாற்றமே காரணமாகும்.

Additional information

Weight .500 kg
book-author

Reviews

There are no reviews yet.

Only logged in customers who have purchased this product may leave a review.