Description
வரலாற்றின் மிகப்பெரிய ஆளுமைகளின் வெற்றிக்குப் பின் பலரது வீரமும், தியாகமும் உள்ளடங்கியுள்ளது. ஆயினும், நாம் சிறப்பாகப் பேசுவது ஆளுமைகளான அரசர்களைப் பற்றி மட்டுமே. இதிலிருந்து சற்று மாறுபட்டு, ‘சிம்மேந்திரன்’ என்னும் கற்பனைப் பாத்திரத்தை மையப்படுத்தி, அவனைச் சிற்றரசனாகப் படைத்து, குலோத்துங்கச் சோழனின் வரலாற்றில் அவனை உட்புகுத்தியுள்ளது இந்த வரலாற்று நாவல்.