சோழர் வரலாற்றில் மச்சபுரீஸ்வரர்

சோழர் வரலாற்றில் மச்சபுரீஸ்வரர்

100.00

SKU: MJPH10090 Category: Product ID: 2931

Description

சோழர் ஆட்சியில் நுண்களைகளான கட்டிடம், சிற்பம், ஓவியம் முதலான கலைகள் வளர்ச்சியுற்றன. மச்சபுரீஸ்வரர் கோயில் அவற்றை இன்றும் பிரதிபலிப்பனவாக இருகின்றது. செங்கற்றளியாக முதலாம் ஆதித்தனால் உருவாக்கப்பட்டதை சுந்தரசோழனால் கற்றளியாக (கருங்கல் தளி) உருமாற்றம் செய்யப்பட்டது. இக்கோயிலில் சோழ அரசர்கள் பலராலும் அழகியசிற்பங்கள் வடிக்கப்பெற்றதையும், கல்வெட்டுகள் பொறிக்கப்பட்டுயுள்ளதையும் விளக்குவதுடன், கல்வெட்டின் வாயிலாக அக்கால நிருவாகமுறை, கொடைகள், மருத்துவசாலை அமைக்கப்பட்ட சான்றுகள், வேதகல்வி முறை, கடனாக நிதிபெற்று அதற்குரிய வட்டி செலுத்தும் வங்கியாகவும் கோயில் சபை செயல்பட்டதையும், முகமண்டபத்தின் முன்புறம் காணும் சிற்பமானது தலபுராணத்தை சுட்டுவதாக ( மீன் (சேல்) ஒன்று இத்தலத்து இறைவனைப் பூஜிப்பதாக வடிக்கப்பட்டுள்ளது. இத்தலமானது மீன ராசிகாரர்களுக்குப் பரிகாரத் தலமாக ஆன்மீகவாதிகளால் வணங்கப்படுகிறது என விவரிக்கிறது இந்த புத்தகம்.