Description

டாக்டர் சி. நடேச முதலியார் (1875-1937) நீதிக்கட்சியின் நிறுவனர் ஆவார். சென்னை நகரத்தில் திருவல்லிக்கேணி, பொன்னேரியில் பிறந்தார். இவர் சென்னை மாநிலக் கல்லூரியிலும், சென்னை மருத்துவக்கல்லூரியிலும் படித்து டாக்டர் பட்டம் பெற்றார்.இவர் பிராமணரல்லாத வகுப்பினரின் நலனுக்காக குரல் கொடுக்க 1912 இல் ஐக்கிய சென்னை இயக்கம் (ஆங்கிலம்:Madras United League) என்ற அமைப்பை உருவாக்கினார். பின்னர் இவ்வியக்கம் சென்னை திராவிடர் சங்கம் (ஆங்கிலம்:Madras Dravidian Association) என்று பெயர் மாற்றம் செய்யப்பட்டது. அரசியலில் பங்கேற்காமல் 1914 இல் சென்னையில் பிராமணரல்லாத மாணவர்களுக்காக ஒரு விடுதியை துவக்கினார். முதலியார் 1916 இல் அரசியல் போட்டியாளர்களாக இருந்த தியாகராய செட்டியையும் டாக்டர் டி. எம். நாயரையும் ஒருங்கிணைந்து செயல்பட வைத்தார். இதனால் ”தென்னிந்திய நல வாரியம்” எனப்படும் நீதிக்கட்சி உருவானது; முதலியாரும் அதன் முன்னணி தலைவர்களுள் ஒருவரானார்.

Reviews

There are no reviews yet.

Only logged in customers who have purchased this product may leave a review.