Description
சிறப்பான ஒரு வரலாற்று நாவல் புனைவதற்கு மகோந்தமான பொற்காலம் மட்டும்தான் பயன்படும் என்ற நம்பிக்கை இங்கு ஒரு சம்பிரதயமாகியிருக்கிறது. பார்க்கப் போனால் பாண்டியர்களின் இருண்டகாலம் களப்பிரர்களுக்குப் பொற்காலமாகியிருக்கும். நாட்டை மீட்டதன் பின் களப்பிரர்களின் இருண்டகாலம் பாண்டியர்களின் பொற்காலமாக மாறியிருக்கும்.
கி. பி 3 ம் நூற்றாண்டின் தொடக்கம் முதல் 6 ம் நூற்றாண்டின் பிற்பகுதி வரை பாண்டிய நாடு களப்பிரர் ஆட்சியில் சிக்கியிருந்ததாகத் தெரிகிறது. இது தொடர்பான ஆதாரங்கள் வேள்விக் குடி செப்பேடுகளில் இருந்து கிடைத்தன. இதுவே கதைக்கு ஆதாரமாக அமைந்தன.