நிர்பயா சிறுகதைகள்

நிர்பயா சிறுகதைகள்

350.00

SKU: MJPH10148 Category: Product ID: 2986

Description

நீதியின் நிழலில் இளைப்பாறவே மானுடத்தின ஆழ்மனம் விரும்புகிறது. நிழல் எல்லோருக்கும் பொது என்பதுபோல, நீதியும் எல்லோருக்கும் பொதுவா? நல்லோருக்கும் தீயோருக்கும் ஏற்புடைய ஒரு நீதி இருக்க இயலுமா? நீதி என்பதே வளையாத தன்மையுடையதுதானே! எல்லோருக்கும் வளையும் நீதி என்பது அந்திதானே! நீதி என்பதற்குக் குறியீடாக, ‘வளையாச் செங்கோல்’ என்ற கருத்தாக்கத்தைத்தானே நம் முன்னோர் வரையறை செய்துள்ளனர். –
நீதி என்பதே அறத்தின் அடிக்கட்டுமானத்தில் நன்றாக ஊன்றி, வளையாத் தன்மையோடு நிலைக்கச் செய்து, நிறுவப்படுவது தானே! அந்த நீதியின் நிழலில் தீயோர் எவ்வாறு இளைப்பாற இயலும்? அறத்தின் அடிப்படையில் தம் வாழ்வை நடத்துவோரே நீதியின் நிழலில் இளைப்பாறும் அடிப்படைத் தகுதியைப் பெற்றவர்கள். நீதி காலந்தோறும் அறத்தின் கால்களால்தான் எழுந்து நிற்கிறது. ‘வழுவா நீதி’ என்பது பேரறத்தின் சிகரமன்றி வேறு என்ன? அந்தச் சிகரத்தின் – நிழலைத் தேடி வலசைபோகும் பறவைகளெனக் காலந்தோறும் வந்து வந்து அமர்கின்றன மானுட மனம்.
எங்கெல்லாம் நீதி தள்ளாடுகிறதோ அங்கெல்லாம் நீதிக்காக உயிரையும் கொடுப்பவர்கள் வந்து நிற்கிறார்கள். தங்களின் உயிரையும் கொடுத்து நீதியைத் தாங்கிப் பிடிக்கின்றனர். நீதி ஒருபோதும் கீழே விழுவதும் இல்லை; அதன் நிழலில் இளைப்பாற மானுடம் தவறுவதும் இல்லை .
. மானுடத்தின் மரபணுவில் நீதியின் தடம் பதிந்துள்ளது. மானுடனை மானுடனாகவே இந்த உலகத்தில் உயிர்த்திருக்கச் செய்யும் அழுத்தமான விசையே அந்தத் தடம்தான் என்பதை ஒவ்வொருவரும் உணர்ந்து, அதைத் தம்முள் பாதுகாக்க வேண்டும்.