Description

ஜவகர்லால் நேரு (நவம்பர் 14, 1889 – மே 27, 1964), இந்தியாவின் முதல் பிரதமர் ஆவார். இவர் பண்டிட் நேரு மற்றும் பண்டிதர் நேரு என்றும் அழைக்கப் பெற்றார். இவர் குழந்தைகள் மேல் மிகவும் அன்பு கொண்டவர். இவர் பிறந்தநாள் அன்று இந்தியாவில் குழந்தைகள் தினம் கொண்டாடப்படுகிறது.

இந்தியா, 1947 ஆம் ஆண்டு ஆகத்து 15 அன்று ஆங்கிலேயரிடமிருந்து விடுதலை பெற்றபோது அதன் முதலாவது தலைமை அமைச்சராகப் பதவியேற்றார். 1964, மே 27 இல், காலமாகும் வரை இப்பதவியை வகித்து வந்தார்.

இந்திய சுதந்திர இயக்கத்தின் முன்னோடியான நேரு, காங்கிரசுக் கட்சியினால் தேர்ந்தெடுக்கப்பட்டு, 1952 இல் இந்தியாவின் முதல் பொதுத்தேர்தலில் காங்கிரசு வெற்றி பெற்றதும் குடியரசு இந்தியாவின் முதல் பிரதமராகப் பதவி ஏற்றார். அணி சேரா இயக்கத்தை உருவாக்கியவர்களில் ஒருவரான நேரு, போருக்குப் பின்னான காலத்தில் அனைத்து உலக அரசியலில் மிக முக்கிய நபரானார்.

Reviews

There are no reviews yet.

Be the first to review “பண்டித ஜவஹர்லால் நேரு PANDIT JAWAHARLAL NEHRU”