பரிதிமாற் கலைஞர்

பரிதிமாற் கலைஞர்

80.00

SKU: MJPH10073 Category: Product ID: 2914

Description

தனித்தமிழ் நாவலர் த.ச.தமிழனாரின் வகுப்பறைச் சொற்களில் முளைத்தது என் மொழியுணர்வு, ஆங்கிலமும், சங்கதமும் அவரிடம் கால்பிடித்துக் கிடந்தாலும் உறக்கத்திலும் பிறமொழி ஏந்தாத உதடுகள் அவருடையன. தமிழாகி நின்றவர்.. என்னுள் தமிழற்றிச் சென்றவர். அன்றாட வாழ்வில் பிறமொழிச் சொற்களைக் கலக்கும்போது எனக்குள் எழும் குற்ற உணர்வு அவர் விதைத்ததே. தமிழனாரின் வாழ்க்கை வரலாற்றை எழுத முயன்ற போதுதான் தனித்தமிழ் இயக்கத்தின் முன்தோன்றியான பரிதிமாற் கலைஞரின் தமிழ்வாழ்வை முதலில் பதிவு செய்ய வேண்டும் என்ற எண்ணம் எழுந்தது. அவரின் வாழ்க்கை வரலாற்றைப் படிக்கப் படிக்க வியப்பின் உச்சிக்குப் போனேன்.
தமிழுக்காகவும் தமிழர்களுக்காகவும் எழுந்த மூத்தகுரல்களில் பரிதிமாலருடையது ஒரு போர்க்குரல். பார்ப்பனராகப் பிறந்து பார்ப்பன சூழ்ச்சியை அறுக்கும் முயற்சிகள் அவர் வாழ்வில் ஏராளம். மாணவ ஆசிரிய உறவுகளில் பட்டறிவாய் வெளிப்பட்டு நிற்கிறது அவரின் தமிழாளுமை. படிப்பாளி படைப்பாளி என்பதோடு இல்லாமல் தமிழ் உணர்வின் பாட்டாளியாகவும் பயணப் பட்டிருக்கிறது பரிதிமாலரின் அறவாழ்வு. தமிழகத்தில் இன்றைக்கு ஓரளவேனும் தமிழ் இருக்கிறது என்றால் இத்தகைய தமிழ் நேயர்களின் வினைப் பாடுகளின் விளைபயனே. அவற்றில் சிறுதுளியை ஏந்தி வந்திருக்கிற இந்நூல், தமிழுணர்வு அற்றுப்போன சூழலில் இளைஞர்களிடம் உந்துதலை ஏற்படுத்தும்,