Description
பாண்டிய முரசு (வரலாற்று நாவல்)
தமிழக வரலாற்றின் பொற்காலம் என்பது சங்ககாலம் தான். அப்படிப்பட்ட பொற்கால வரலாற்றின் ஒரு பகுதியைத் தான் ‘பாண்டிய முரசு’ சித்தரிக்கிறது. இதன் கதை சுமார் 1800 ஆண்டுகளுக்கு முன்னால் நடந்த கதை. பாண்டிய பேரரசில் ஆட்சி புரிந்த தலையாலங்கானத்துச செருவென்ற நெடுஞ்செழியனைப் பற்றியக் கதை.
சங்க இலக்கியங்களான புறநானூறு, அகநானூறு, மதுரைக் காஞ்சி ஆகியவை பாண்டியன் நெடுஞ்செழியனின் தலையாலங்கானத்துப் போரைப் பற்றி விரிவாக விவரிக்கின்றன.
பாண்டிய மன்னனைச் சிறுவன் என்று சேர மன்னன் இகழ்ந்தால் அப்பாண்டிய மன்னன் போரிட்டுச் சேர சோழரையும் அவர்களுக்கு உதவ வந்த வேளிர் ஐவரையும் புறமுதுகிட்டு ஓடச்செய்ததாகப் பெருமையுடன் கூறுகின்றன.