Description

மதுரை, டாக்டர் புலவர் வை.சங்கரலிங்கனார் அவர்கள் தமிழகம் அறிந்த பண்பாளர், ஆசிரியப் பணியில் இருந்து ஆயிரக்கணக்கான மாணவர்களுக்கு வழிகாட்டியவர், மாணவர்களின் ஒளிவிளக்காக திகழ்ந்தவர். இவருடைய பரை கேட்டு உற்சாகம், பெறுபவர்கள் பலர். தன்னைப்போலவே அடுத்தவர்களையும் உற்சாகப்படுத்தி உயர வைக்கவேண்டும் என்ற உயர்ந்த உள்ளம் கொண்டவர். பாரத ரத்னா, எம்.ஜி.ஆர். அவர்கள் பற்றி ஒரு புத்தகம் படைத்திருப்பது என்பது மிகவும் பொருத்தமானது.
மகாகவி பாரதியார் அவர்கள் இயற்றிய ‘புதிய ஆத்திச்சூடி’ தமிழ்நாட்டின் புதிய தலைமுறையினருக்குப் புது இரத்தத்தைப் பாய்ச்சியது. மகாகவி பாரதியார் இக்காலத்தின், தேவையைக் கணக்கில் கொண்டு ஔவையாரின் ஆத்திசூடியைவிட வரிகளில் சுருக்கத்தையும் கருத்தில் இறுக்கத்தையும் கடைப்பிடித்துத்தான் ‘புதிய ஆத்திச்சூடி யை, இயற்றினார். இந்த ஆத்திச்சூடி கதைகள் அனைத்துமே மகாகவி பாரதியாரின் ‘புதிய ஆத்திச்சூடி’ வரிகளைப் போன்றே இளந்தலைமுறையினரின் மனத்தில் ஆணியடித்தது. போல பதியத் தக்கன. கதையின் மையமும் கதையின் நடையும் மகாகவி பாரதியாரைப் போன்றே இருப்பினும் கதையில் இழையோடும் நகைச்சுவை முழுக்க முழுக்க முனைவர் வை.சங்கரலிங்கனார் அவர்களுக்கே உரித்தானதுதான். –

Additional information

book-author

PUBLICATION

MJ PUBLICATION

Reviews

There are no reviews yet.

Be the first to review “பாரதியின் ஆத்திசூடி கதைகள் 50 BHARATHIYIN ATHICHUDI KADHAIGAL 50”