Description
புறநானூற்றில் உள்ள சம்பவத்தைச் சித்தரிக்கும் பாங்கிலமைந்த பாடல்களை எளிய நடையில் கதை சொல்வது போன்று விளக்கும் முயற்சியே இந்தப் புத்தகம்.
இவை புறநானூற்றுச் சிறுகதைகள் என்ற தொடராகச் சுதேசமித்திரன் வார மலரில் முன்பு நான் எழுதியவை. புறநானூற்றுப் பாடலையும், பதவுரையையும் படித்தால் கூட இவற்றில் இவ்வளவு சுவையான சம்பவமோ, கதையோ, நிகழ்ச்சியோ அமைந்திருப்பது புரிந்துவிடாது. ஆனால் இந்நூலில் பாடல்களுக்கு முன்பாக இங்கு விவரிக்கப்பட்டிருப்பது போல், விவரிக்கப்பட்ட விளக்கத்தைப் படித்தால் புறநானூற்றுப் பாடலில் உள்ள சுவை புலப்படும்.
சரியான முறையிலும் எளிமையான விதத்திலும் மக்களுக்கு வழங்கப்பட்டால் சங்க இலக்கியப் பாடல்களைப் பற்றிய பயம் அறவே நீங்கிவிடும்.
இரசிகத் தன்மையை வளர்க்கும் முயற்சிகளில் இந்த நூலும் ஒன்று என்று பெருமிதத்தோடு கூறிக் கொள்கிறேன்.