Description
பொன்னி வளவன் (வரலாற்று நாவல்)
காலம் கடந்து நிற்கும் ஒரு பெரிய விருட்சத்தின் பிரம்மாண்டம், அதன் கம்பீரமான உருவத்தால் மட்டுமல்ல. அதைத் தாங்கி நிற்கும் வேர்களாலும்தான். கண்ணுக்குத் தெரியாவிட்டாலும், அந்த வேர்கள் இல்லாவிடில், விருட்சம் நிலைத்திருக்காது.
சோழம் என்னும் மாபெரும் விருட்சத்தின் பிரம்மாண்டம், அதனை ஆண்ட மாபெரும் மன்னர்களின் வீரத்தால் மட்டுமல்ல. வேர்களாக நின்று, பல தியாகங்களை உள்ளடக்கி, சோழம் நிலைத்துநிற்க, தங்கள் உயிரையும் கொடுத்துக் கடமைபுரிந்த தளபதிகளும், உபதளபதிகளும், வீரர்களும், நிர்வாக அதிகாரிகளும் என எண்ணற்றோர் உண்டு.
ஈழப்பகுதியை நிர்வகித்து வந்த அப்படியொரு சோழத் தளபதியினைப் பற்றிய புதினம் தான் இது.
Reviews
There are no reviews yet.