மணல் கடிகாரம்

மணல் கடிகாரம்

100.00

SKU: MJPH10060 Category: Product ID: 2668

Description

“எதார்த்த வாழ்வியலை இதயத்துக்குள் தொகுத்துவைத்து – ஒரு கலைவங்கி போல் நடமாடும் கலைஞன் தான் கவிஞன்.”

தன்னுடடைய இயல்பு வாழ்க்கையில் சேமித்துக் கொண்டிருக்கும் உணர்வுகளையெல்லாம் எழுத்து வழியே செலவு செய்வதற்கு வாழ்க்கை அவனுக்கு கைநிறைய வாரி வாரி வழங்கிக் கொண்டேயிருக்கும். காற்றின் கைகளை பிடித்துக்கொண்டு நதியோடு நடந்து போகின்ற மனதுடைய கவிஞன் எழுதும் எழுத்தெல்லாம் காதலாய், நட்பாய், சமூகத்தின் அக்கறையோடு பக்கங்களெல்லாம் பரவிக்கிடப்பதை பார்த்து பரவசமடைந்தேன்.

மணல் கடிகாரம் நேரம் மட்டும் காட்டவில்லை,
கவிதையின் ஆழம் காட்டுகிறது,
மனித நேயத்தின் தூரம் காட்டுகிறது.
– – பா.விஜய்