Availability: In Stock

மெக்கன்சியின் தமிழ் சுவடிகள் காட்டும் மக்கள் வாழ்வியல் MEGANSIYIN TAMIL SUVADIGAL KATUM MAKKAL VAZHVIYAL

350.00

Description

காலின் மெக்கன்சி (Colin Mackenzie, 1754 – 8 மே 1821) ஆங்கிலேய கிழக்கிந்திய நிறுவனத்தில் பணியாற்றிய ஸ்காட்லாந்திய இராணுவ அதிகாரி. 1815 ஆம் ஆண்டு அவர் இந்தியாவின் முதல் தலைமை மதிப்பீட்டாளர் ஆனார்.

மெக்கன்சி, தொல்பொருள் சேகரிப்பு மற்றும் ஒரு கீழ்த்திசை நாட்டு ஆர்வலர். ஆரம்பத்தில் தனிப்பட்ட ஆர்வத்தாலும் பின்னர் மதிப்பீட்டாளர் பணியின் பொருட்டும் தென்னிந்தியாவின் சமயம், செவிவழி வரலாறு, கல்வெட்டுகள் முதலியவற்றை உள்ளூர் உரைபெயர்ப்பாளர்களையும் அறிஞர்களையும் பயன்படுத்திப் பட்டியலிட்டார். 1799 ஆம் ஆண்டு திப்பு சுல்தானை ஆங்கிலேயர்கள் வென்ற பிறகு மைசூர் வட்டாரத்தை மதிப்பிட பணிக்கப்பட்டார்.

மைசூர் வட்டாரத்தின் நிலப்பரப்பு விளக்கப்படங்கள், குறிப்புகள், தொல்பொருள் சிறப்புமிக்க இடங்கள் முதலியவற்றைக் கொண்ட நில வரைபடங்களை முதன்முதலாக உருவாக்கினார். ஆயிரக்கணக்கான சுவடிகள், கல்வெட்டுகள், மொழிபெயர்ப்புகள், நாணயங்கள் மற்றும் ஓவியங்களைக் கொண்ட அவரது திரட்டுகளை இந்திய அரசு நூலகம் அவரது இறப்பிற்குப் பின் கையகப்படுத்தியது. அவரது திரட்டுகள் இந்திய வரலாற்றைப் பற்றி அறிந்து கொள்ள இன்றியமையாத சான்றுகளாகத் திகழ்கின்றன.

Additional information

Author

Publication

NAM TAMILAR PATHIPPAGAM

Reviews

There are no reviews yet.

Only logged in customers who have purchased this product may leave a review.