Description
ருத்ர அசுவத்தாமா மஹா பாரதக் கதை (வரலாற்றுப் புதினம்)
மகாபாரத காவியத்தில் இடம் பெற்றவர்களில், மிகவும் புண்ணியசாலியாகவும், பாக்கியசாலியாகவும் இருப்பவர் யார்?
இக்கேள்வியைத் தொடுத்தால் பலவகையான பதில்கள் கிடைக்கும். சிலர் “தர்மன், விதுரர், பீமன்”, “கர்ணன்” என்று தங்களது வாதங்களை முன் வைப்பார்கள்.
உண்மையில் மிகவும் புண்ணியம் செய்தவனும் பாக்கியசாளியாகவும் இருப்பவன் திருதராஷ்டிரனின் தேரோட்டியாகவும், உதவியாளனாகவும், மந்திரியாகவும் இருந்த சஞ்சயன் தான் அப்பேர்பட்டபாக்கியசாலி.
அசுவத்தாமன் மகாபாரத காவியத்தில் மிகவும் பாவம் செய்தவனாகவும் துரதிஷ்டசாலியாகவும் சித்தரிக்கப்படுபவன். அசுவத்தாமனின் வாழ்வைப் பற்றி இந்நாவலில் காண்போம் .