Description

இந்தப் புத்தகம் வெளிவருவதற்கு பெரு முயற்சிகள் மேற்கொண்ட திரு.கே.ஆர்.என்.மனோஸ் திருப்பூரை சேர்ந்த இளைஞர். மெக்கானிக் என்ஜினியரிங்கில் எம்.டெக் முடித்திருக்கிறார் அதே சமயம் எலக்ட்ரிகல் பிரிவிலும் பரிச்சயம் மிக்கவர் இண்டஸ்ட்ரியல் ஆட்டோமேஷன் மற்றும் ரோபோடிக் சபீன்ஸ் துறையில் ஸ்பெஷலிஸ்ட் என்ஜினியரிங் படிக்கும் மாணவர்களுக்கு உயர்கம்விக்கும் வேலை வாய்ப்புக்கும் ஆலோசனைகளை வழங்கி வருகிறார்.
CADD ட்ரெய்னர். தொழிலதிபர் கலை இலக்கியத்திலும் ஆர்வம் கொண்டவர்?”
நாள்தோறும் நாம் பல மனிதர்களை கடந்து செல்கிறோம். சிலர் – பார்ப்பதற்கு எளிமையாக இருந்தாலும் ஏதோ ஒரு வகையில் சாதனையாளர்களாக இருக்கிறார்கள். அப்படிப்பட்ட சாதனையாளர்களை அடையாளம் கண்டு எழுதியிருக்கிறார் நூலாசிரியர் ஆதபூைர் சூரியகுமார். பேருந்தில் தைலம் விற்பவர். ஓடும் ரயிலில் புத்தகம் விற்பவர், போட்டித் தேர்வில் வெற்றி பெற்று அரசுப் பணி செய்பவர், மார்க்கெட்டிங்கில் சாதிக்கும் மாணவர்கள், என்ஜினியரிங் படித்து சாதிக்கும் இளைஞர்கள் என்று சின்னச் சின்ன வெற்றியாளர்கள் இந்த நூலில் நம் கண்முன் கொண்டு வந்து நிறுத்தப் பட்டிருக்கிறார்கள்.
வாழ்க்கையை ஜெயிக்க நமக்கு ஓர் ஒளிக்கீற்று தென்படாதா என்று ஏங்கித் தவிக்கும்
இளைஞர்களுக்கு கிடைத்திருக்கிற வெளிச்சம் இந்த நூல். வேலை வாய்ப்பிற்காகவும் பொருளாதார முன்னேற்றத் திற்காகவும் காத்திருப்பவர்களுக்கு ஒவ்வொரு கட்டுரையும் ஒவ்வொரு விதத்தில் வழிகாட்டுகிறது. உற்வசம் நமக்கு நம்பிக்கை சிறகுகள் இருக்கிறது சிகரம் தொடுவோம்

Additional information

Weight 0.5 kg
Author

Publication

MJ PUBLICATION HOUSE

Book Type

Paperback

Reviews

There are no reviews yet.

Only logged in customers who have purchased this product may leave a review.