Description
விடியல் என்பது நிர்ணயிக்கப்பட்ட போதே இரவு என்பதும் உறுதியான ஒன்று. பல ஆண்டு காலங்கள் வளர்பிறையாக இருந்த சோழப் பேரரசுக்கும் காலம் இறங்கு முகத்தைக் காட்டியது. சோழர்கள் அவ்வாறு இறங்கு முகம் காண நேர்ந்த முக்கியமான போர்களில் ஒன்று மட்டியூர் போர். மூன்றாம் குலோத்துங்க சோழர் முன்னெடுத்த மட்டியூர் போரில் சோழர் படை அபார வெற்றி பெற்றது. எனில் இறங்குமுகம் எப்படி வந்தது? அந்த இறங்குமுகத்தைப் பற்றி வரலாற்று சம்பவங்களுடன் கற்பனை கலந்து புனையப்பட்ட புதினமே “வீரக்கழல்”.