Description
நாமக்கல் மாவட்ட இளஞ்சிறார் நீதிக்குழுமத்தில் 2012 முதல் 2019 வரை நீதிக்குழும உறுப்பினராக செயல்பட்டபோது சந்தித்த குற்றச்செயல்களில் ஈடுபடும் இளஞ்சிறார்கள் வாழ்வில் மன மாற்றம் வாழ்வில் ஏற்றம் பெறவும் இனிவரும் காலங்களில் இளைஞர்கள் சட்டத்திற்கு முரண்படும் செயல்களில் ஈடுபடாமல் தடுக்க என்ன செய்யலாம் என்ற ஆழ்ந்த சிந்தனையும் அறிவார்ந்த அனுபவம் மிக்க மக்களின் சிந்தனை தொகுப்பாகவே இந்நூலை எழுதினேன்.
– பல ஆண்டுகளுக்கு முன்பாகப் பள்ளிகளில் ‘நீதி போதனை வகுப்பு’ என்ற ஒரு வகுப்பு தொடர்ந்து நடைபெற்று வந்தது. பல பள்ளிகளில் அந்த வகுப்பினைப் பிற பாடங்களை நடத்துவதற்காகப் பயன்படுத்தத் தொடங்கினர். பின்னாளில் அந்த வகுப்பு முற்றிலுமாக நீக்கப்பட்டு, அந்த நேரத்தில் பிற பாடத்தை நடத்தத் தொடங்கினர். –
“ஏன் அந்த நீதி போதனை வகுப்பினை நீக்கி விட்டீர்கள்?” என்று கேட்டதற்கு, ஆசிரியர் தரப்பிலிருந்து, “நாங்கள் பிற பாடங்களை நடத்தும் போதே நீதிபோதனை களையும் கற்பித்து விடுகிறோம்” என்று கூறப்பட்டது. அதைப் பெற்றோரும் நம்பினார். ‘பாடங்களை நடத்தும் பொழுது நீதிகளைப் பற்றி ஆங்காங்கே கோடிட்டு மட்டுமே காட்ட முடியும்’ என்பது எல்லோரும் அறிந்த உண்மை தான்.
– பள்ளிகளில் நீதிபோதனை வகுப்பு இல்லாத காரணத்தால் தான் சமுதாயத்தில் சிறுவர் சீர்திருத்த பள்ளியில் நெருக்கடி ஏற்படுகிறது என்பது கசப்பான உண்மையே. சிறுவர் சீர்திருத்த பள்ளியில் ஒரு சிறாரைக்கூடச் சேர்க்காமல் இருக்கு வேண்டுமெனில், அதற்குப் பள்ளிக்கூடமும் சமுதாயமும் இணைந்து உதவ வேண்டும்.
பள்ளிக்கூடமும் சமுதாயமும் சிறார்களுக்கு வளரிளம் பருவத்திலேயே நீதி போதனைகளைக் கற்றுக்கொடுத்து, சமுதாயத்தில் சிறந்த மனிதராக அவர்கள் வாழ்வதற்குரிய அடித்தளத்தை அமைக்க வேண்டும்.
Reviews
There are no reviews yet.