Description
இராஜகேசரி ஆதித்த சோழன் (வரலாற்று நாவல்)
பிற்கால சோழ சாம்ராஜ்ஜியத்தின் மாபெரும் புகழிற்கு வித்திட்டார் கோப்பரகேசரி விஜயாலயர். அவரைத் தொடர்ந்து அதன் இருப்பினை நிலை நிறுத்தினார் இராஜகேசரி ஆதித்த சோழர். சோழத்தினை வென்று அடக்கியாண்டு வந்த மாபெரும் பல்லவ சாம்ராஜ்ஜியத்தின் பிடியிலிருந்து எவ்வாறு விலகி தனக்கென ஓர் தனிப்பட்ட சுதந்திர தேசத்தினை அப்போதைய சிற்றரசராக இருந்த விஜயாலயரால் எங்ஙகனம் முடிந்தது? விஜயாலயரின் இராஜதந்திர யுக்திகளுடன் அவரது மகனான ஆதித்தன் ‘ மகன் தந்தைக்காற்றும் உதவி ‘ என்ற பாங்கில் என்ன பங்களிப்பு செய்தான் என்பதை விளக்கும் புதினம் இது. இந்த புதினத்தின் பெரும் பயணத்தில் என்னோடு கைக்கோர்த்துக் கொள்ளுங்கள்.