Description

இன்றைய காலக்கட்டதில் பெண்கள் எல்லா வகையிலும் 50 விழுக்காடு உள்ளனர். ஆனால், அவர்களுக்குச் சலுகைகளும் முன்னுரிமைகளும் வெறும் 33 விழுக்காடு மட்டுமே வழங்கப்படுகின்றன. அவற்றையும் அவர்கள் பல தருணங்களில் போராடித்தான் பெறுகின்றனர்.
பிறப்பு முதல் இறப்பு வரை போரட்டத்தை மட்டுமே எதிர்கொண்டு வரும் பெண்ணினம் பற்றிய காலாப்பதிவாகவும் அவ் இனத்தின் ஒட்டுமொத்த குறு வரலாறாகவும் இந்தப் புத்தகம் உள்ளது.
இப்புத்தகத்தில் இடம்பெற்றுள்ள பெண்கள் அனைவரும் எளிய பெண்கள்தான். ஆனால், அளப்பரிய சாதனைகளைப் புரிந்தவர்கள். இந்தப் பூக்கள் காலையில் பூத்து மாலையில் வாடிவிடும் சாதாரணப் பூக்கள் அல்ல. காலந்தோறும் மக்கள் மனத்தில் நின்று மணக்கும் இரும்பு பூக்கள்.