Description
மக்களை நல்வழிப்படுத்த இயேசு பற்பல கருத்துக்களை தமது போதனைகளின் வழி வழங்கியுள்ளார். அவரது போதனைகள் அன்று முதல் இன்று வரை மனிதகுலத்தில் பெரும் தாக்கத்தினை ஏற்படுத்தி வருகின்றன. இயேசு தனிமனிதரல்லர்: இறைமகன்: அவர் ஒரு இயக்கம். சமயச் சிந்தனை மரபின் தொடர்ச்சியில் ஒரு பேரலையாக எழுந்தவர் இயேசு ஆவார். அன்பு, சமதர்மம், இறைநம்பிக்கை போன்றவற்றின் தேவையை வற்புறுத்திய மூலவர்களுள் ஒருவர் இயேசு. இயேசுவின் மேன்மைகள், முரண்பாடுகள், சாதனைகள் ஆகிய அனைத்தும் உலக சமயச் சூழலோடு தொடர்புடையவை. ஆதலால், அவர் உலகச் சமயச் சிந்தனை மரபில் தவிர்க்க முடியாத ஆளுமையாக உள்ளார். அவரின் சிந்தனை, செயல்பாடுகள், சமுதாயப்பணி முதலானவற்றை அவரின் புனிதச் சிலுவையின் நிழலில் அமர்ந்தபடியே உய்த்துணரும் வகையில், இந்த புத்தகம் எழுதப்பட்டுள்ளது.
Reviews
There are no reviews yet.