Description

பெருவுடையார் (வரலாற்று புதினம்)

பல அதிசயங்களையும், அற்புதங்களையும் தன்னுள் அடக்கியிருக்கும் சோழமானது, என்னுள் உணர்த்திய இன்னோர் அற்புதம்தான் இந்த பெருவுடையார் என்னும் புதினம். சோழத்தின் பேரரசர்கள் அனைவருமே உடையார் என்ற பட்டத்தினை, அனைத்தும் உடையவர் என்ற பொருளில், மன்னரைக் குறிக்கப் பயன்படுத்தியிருந்தாலும், உடையார் என்ற சொல், வெகு அழகாகப் பொருந்தி, இராஜராஜருக்கு மட்டுமே உரித்தானதாகிப் போனது, எழுத்துச் சித்தர் பாலகுமாரன் அவர்களால்.

உடையவராக நின்ற மாமன்னர் இராஜராஜர், இறையின் கருணையால், பெருவுடையராகிப் போனது பற்றிய நிகழ்வுகளை விளக்குவதே இப்புதினம். கி.பி.1004 முதல் கி.பி.1014 வரையிலான சில நிகழ்வுகளை தன்னுள் அடக்கியதுதான் இப்புதினம்.