Description
மாறவர்மன் சபதம் (வரலாற்று நாவல்)
பாண்டியர்களின் வலிமை குன்றி, சோழர்களின் ஆதிக்கம் வலுப்பெற்றிருந்ததற்குக் காரணம், பாண்டியர்களின் உள்நாட்டு போரே ஆகும்.
இந்த உள்நாட்டுப் போர்களினால், பாண்டிய மன்னர்கள் ஒற்றுமையின்றி இருந்ததைச் சாதகமாகக் கொண்டு மூன்றாம் குலோத்துங்க சோழன் மதுரையை எளிதில் வென்றான் சோழ பாண்டியர்கள் என்ற பெயரில் சோழர்கள் ஆட்சி புரிந்து வந்தனர்.
இரண்டாம் மாறவர்மன் சுந்தர பாண்டியனுக்கு பிறகு சடையவர்மன் சுந்தர பாண்டியன் ஆட்சிப் பீடத்தில் அமர்ந்து ” மதுரையை மீட்ட சுந்தரப்பாண்டியனாக” ஆட்சி நடத்தினான். முதலாம் மாறவர்மனின் சபதத்தையும் நிறைவேற்றினான்.
பாண்டியர்களின் உள்நாட்டுப் போரிலிருந்து மீள்வதற்கும், ஒற்றுமை ஏற்படுத்தவும் அருமையான கதைக்களம் அமைத்து இப்புதினத்தை எழுதியுள்ளேன்.