Description

மேற்கே ஓர் சூரியன் கண்டராதித்த சோழன் (வரலாற்று நாவல் )

“மேற்கே எழுந்தருளிய தேவர்” என சோழ வரலாற்றில், பெருமையோடு பெருமையோடு குறிப்பிடப்படும். கண்டராதித்த சோழர், எவருமே அறியாது போன மற்றுமோர் பொக்கிஷம். அவரது மறைவு என்பது, இன்றுவரை அறியப்படாத ஒரு பெரும் இரகசியமாகவே இருக்கிறது. அதுபற்றிய ஓர் திறவுகோலாக, எழுதப்பட்டதே இந்தப் புதினம்.

ஒரு சாம்ராஜ்ஜியத்தின் மன்னன், தனது அரச பதவியினை மறந்து, சுகத் துக்கங்களைத் தவிர்த்து, சொந்த பந்தங்களை துறந்து, மேற்கு நோக்கி நகர்கிறார். அதன் பின் என்னவானார் என்பதற்கான ஆதாரங்களாக ஏதுமில்லை.கிடைத்த வரலாற்றுத் தரவுகளைக் கொண்டு இப்படியும் இருக்கலாம் என உணர்வுகளின் அடிப்படையில் புனையப்பட்ட புதினம் இது.