Description
ருத்ர காண்டம் (வரலாற்றுப் புதினம்)
கி.பி.150 முதல் கி.பி.200 ஆம் ஆண்டு வரை காவிரிப்பூம்பட்டினம் என்ற பூம்புகாரைத் தலைநகராகக் கொண்டு மன்னன் ஒருவன் ஆட்சி செய்து வந்தான். அவன் வரலாற்றின் ஒரு பகுதியே இந்த ருத்ர காண்டம்.
சோழர்கள் தலைநகரான பூம்புகார் கடலால் அழிக்கப்பட்டது. இதற்கு கதையும் உண்டு. இந்திரனை மகிழ்விக்க ஒவ்வொரு ஆண்டும் இந்திரவிழா நடத்தப்பட்டதாகவும், ஏதாவது ஒரு ஆண்டு இந்திரவிழா நடத்தப்படாமல்விட்டால் இந்திரனின் கோபத்தில் பூம்புகார் அழிக்கப்பட்டு விடும் என்றும் இந்திரன் சாபமிட்டதாக ஒரு கதை உண்டு. அது உண்மையோ பொய்யோ தெரியாது. ஆனால் பூம்புகார் கடல் கொண்டுவிட்டது. இந்த நிகழ்சிகளின் அடிப்படையில் இந்த நாவல் எழுதப்பட்டதால் இதற்கு ருத்ர காண்டம் என பெயர் இடப்பட்டது.