Description
வீரமாதேவி அகல்யா (வரலாற்று புதினம்)
ஒரு சாதாரணமான குடும்பத்தில் பிறந்து , இளம் வயதிலேயே பேராற்றல் மிக்க வெற்றி வீராங்கனையாகத் திகழ்ந்து, மகாராணியாகி, தனது ஆட்சிக்குட்பட்ட இடங்களில் மட்டுமல்லாமல்,கிழக்கே சோமநாதபுரத்திலிருந்து மேற்கே காசிஷேத்திரம் வரையிலும், தெற்கே இராமேசுவரத்திலிருந்து வடக்கே இமயத்திலுள்ள கேதார்நாத் வரையிலும் நூற்றுக்கணக்கான ஆலயங்களை உருவாக்கியதோடு மட்டுமல்லாமல் பல அறச்செயல்களையும் செய்து, மற்ற நாட்டின்மீது படையெடுத்து கொள்ளை அடித்த செல்வங்களைக் கொண்டோ அல்லது, தனது நாட்டு மக்களின் வரிப்பணத்திலோ, திரைப் பொருள்களை பெற்றோ ஆலயப் பணிகள் செய்யாமல், தனது சொந்த சொத்துகளின் மூலமும், தனக்கு சீதனமாக வந்த சொத்துகளின் மூலமாகவுமே இவ்வறச் செயல்களைச் செய்து, அதுவும் போதாமல், எந்த ஒரு அரசனோ, அரசியோ செய்யத் துணியாத நெசவுத்தொழிலில் ஈடுபட்டு அதனால் கிடைத்த வருவாயையும் ஆலயங்களை எழுப்ப உபயோகப்படுத்தி,அதேசமயம், மற்ற மதத்தினரின் மனம் புண்படாமல் ஆலயங்களை எழுப்பி, பாரத நாட்டு சரித்திரத்திலேயே ஈடு இணையற்ற ஒரு பெண்ணரசி இந்தூர் நாட்டின் மராட்டிய மகாராணி அகல்யா பாய் ஹோல்கர்.
தனது வாழ்க்கையை நாட்டு மக்களுக்காகவும், இறைப் பணிக்காகவும், அறச்செயல்களுக்காகவும் அர்பணித்தவர். அவரைப் பற்றியதே இந்நாவல்.