Description
வெற்றி வாசல் (வரலாற்று நாவல்)
இராசராச சோழன், இராசேந்திர சோழன் இவர்களது காலத்தில் பாண்டியர்களையும், சாளுக்கியர்களையும் ஒடுக்கிவிட்டாலும் , குலோத்துங்க சோழனுக்குப் பின்பு சோழ வம்சம் இவ்வளவு சிறப்புடன் இல்லை. பாண்டிய பேரரசு மீண்டும் தலையெடுக்க அடித்தளமிட்டவன் சுந்தரபாண்டியன் . இப்பாண்டியனுக்கு போரில் உற்ற துணையாக நின்று, தன் உயிரையும் விட்டவர் வாணாதிராயர். அழகர் மலையை ஆண்டு வந்த வாணாதிராயர் தனக்கு துணையாகக் கொண்ட படைவீரனின் பெயரே இரணியன். இன்று அழகர் மலையில் விளங்கும் அந்த கோட்டைக்கு ஒரு படைவீரனின் பெயர் வைக்க காரணம் என்ன? கருப்பசாமி கோவில் உருவான வரலாறு என்ன? என பலக் கேள்விகளுக்கும் விடையளிக்கும் வகையில் இந்நாவல் அமைத்துள்ளது.
Reviews
There are no reviews yet.