Description
உலகில் நாகரிகம்பெற்ற நாட்டினர் நம் முன்னோர் வரலாறுகளைப் பலவகையாலும் ஆய்ந்து, உண்மைச் சரிதங்களை மக்கள் எல்லோரும் உணருமாறு தம் தாய்மொழியில் வெளியிட்டுப் போற்றி வருகின்றனர். நம் தமிழகத்தில் முற்காலத்தில் ஆட்சிபுரிந்த தமிழ் வேந்தர்களான சேர சோழ பாண்டியர்களின் வரலாறுகள் நமக்கு மகிழ்ச்சியும் உணர்ச்சியும் அளிக்கவல்லன என்பது யாவரும் அறிந்ததொன்றாம். கல்வெட்டுக்களையும் செப்பேடுகளையும் தமிழ் நூல்களையும் பிற ஆராய்ச்சி நூல்களையும் ஆதாரமாகக் கொண்டு எழுதப்பெற்றது. ‘பாண்டியர் வரலாறு’ என்னும் இந்நூலாகும். இது கடைச் சங்க காலத்திற்கு முன்னர்த் தொடங்கி, கி. பி பதினேழாம் நூற்றாண்டின் தொடக்கம் வரையில் பாண்டி நாட்டில் ஆட்சிபுரிந்த பாண்டி மன்னர்களின் சரிதங்களைச் சுருக்கமாகக் கூறுவதாகும்








Reviews
There are no reviews yet.