Description
ஒரு மனிதன் எப்படி வாழ வேண்டும் என்பதற்கும் ஒரு தலைவன் எப்படி நாட்டை ஆளவேண்டும் என்பதற்கும் பெருந்தலைவர் காமராஜர் ஒரு உதாரணம்.
தனது திருமணம் தேச சேவைக்கு இடையூறாக
அமைந்துவிடும் என அஞ்சி பிரம்மச்சாரியாக
வாழ்வைத் தியாகம் செய்திட்ட உத்தமர் காமராஜர்.
பதவி, பொருள், புகழ் தேடி அவர் அரசியலுக்கு
வரவில்லை.
விருதுப்பட்டி கிராமத்திற்கு இளம் வயதில் அவர்
செய்துவந்த சேவைதான் அரசியலுக்கு அவரை
இழுத்துச்சென்றது. ஆட்சி அதிகாரத்திற்கு வந்த
பின்னும் அரசாங்கத்தையே ஒரு தொண்டு
நிறுவனம்போல் செயல்படச் செய்தார். காமராஜர்
இறுதிவரை மக்கள் தொண்டராகவே வாழ்ந்து
மறைந்தவர்.
இரண்டுமுறை இந்தியாவின் பிரதமர்களைத் தேர்ந்தெடுத்த ‘கிங்மேக்கர்” ஆயினும் கர்வம் இல்லாத எளிய மனிதராக வாழ்ந்து காட்டினார். அகில இந்திய காங்கிரஸ் தலைவராக உயர்ந்த பின்னும் மக்களில் ஒருவராகவே இருந்தார்.
167ரூபாயுடன் இறந்துபோன ஒரு அரசியல் தலைவனை நாடு கண்டதுன்டா?
காமராஜர் பற்றி எழுதுவதை விட எனக்குவேறென்ன பெருமை வேண்டும்?
Reviews
There are no reviews yet.