Description
இனக்குழுக்களாகத் தோற்றம் பெற்று தலைமுறை தலைமுறையாகத் தொடர்ந்து வாழ்ந்த தமிழினம் பண்பாடு பழக்க வழக்கம், புலமை, பொருளாதாரம், கலைத்திறன் போன்ற பல்வேறு தளங்களில் தம்மைச் செழுமைப்படுத்தி, மகிழ்ந்து வாழ்ந்த காலகட்டமே ‘சங்க காலம். அந்தக் காலகட்டம் குறித்து எழுதப்பட்ட நூல்களுள் 70 விழுக்காடு ஊகங்களில் அடிப்படையில் தமிழரின் புகழினை மிகைப்படுத்துபவை. இவற்றைத் தமிழரும் படிப்பதில்லை. 20 விழுக்காடு பல்கலைக்கழக ஆய்வேடுகளிலும் ஆய்வுக் கட்டுரைக் கோவைகளிலும் தங்கி, பலராலும் படிக்கப்படாமல் ஆழ்துயிலில் இருப்பவை. ஐந்து விழுக்காடு நம்பகமானவையாக இருந்தும் மறு அச்சுக்கு வழியின்றி உயிருக்கு ஊசலாடுபவை நான்கு விழக்காடு சங்க காலம் பற்றிய வெறும் குறிப்புகளாகச் சுருங்கி விட்டவை. மீதமுள்ள ஒரு விழுக்காடு மட்டுமே போது வாசகர்களுக்குத் தொல்தமிழரின் உண்மை முகத்தினை ஆதாரங்களோடு அறிமுகப்படுத்துபவை. அந்த ஒரு விழுக்காட்டில் இந்த நூலும் இடம்பெறும்
Reviews
There are no reviews yet.