Description
ஒரு மணமோ அல்லது ஒரு சுவையோ உங்களுக்கு அந்தப் பொருளை – மட்டும் நினைவுபடுத்தினால், ‘நீங்கள் அதை அனுபவித்தீர்கள்!’ என்று மட்டுமே அர்த்தம். அந்த மணமோ அல்லது அந்தச் சுவையோ உங்களை வேறொரு ஒரு – நிகழ்வுடன், ஒரு நபருடன் அல்லது ஓர் இடத்துடன் தொடர்புபடுத்தினால் மட்டுமே ‘நீங்கள் அதனோடு வாழ்ந்தீர்கள்!’ என்று அர்த்தம். பலர் எல்லாவற்றையும் அனுபவிக்கிறார்கள். சிலர்தான் அவற்றோடு வாழ்கிறார்கள்.
மனம் ஓர் இசைக் கருவி. நாம் அதைச் சிந்தனையைக் கொண்டு மீட்ட மீட்ட அதனுள் பொதிந்துள்ள நினைவுகளுக்கு ஏற்ப அது இசைப்டத் தொடங்குகிறது. ‘நினைவுகளால் மட்டுமே ஒருவர் உயிர்த்திருக்க முடியுமா?’ என்று கேட்டால், ‘முடியும்’ என்பதுதான் இந்த நாவல் நமக்கு அளிக்கும் பதில்.
Reviews
There are no reviews yet.